விளையாட்டு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் 20 ஓவர்ஸ் கலந்துகொள்ள – இந்திய வருகை……

Southafrica will be coming tomorrow - for 20 overs Cricket in India

20 ஓவர் கிரிக்கெட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்க வீரர்கள் நாளை இந்தியா வருகின்றனர். புதுடெல்லியில் பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகின்ற ஜூன் 9-தேதி டெல்லியில் நடைபெறுகிறது . 2 முதல் 5-வது ஆட்டங்கள் முறையே கட்டாக் (ஜூன் 12-தேதி), விசாகப்பட்டினம் (14-தேதி), ராஜ்கோட் (17-தேதி), பெங்களூரு (19-ந்தேதி) ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு தொடங்க இருக்கிறது .
தென்ஆப்பிரிக்க வீரர்கள் நாளை டெல்லி வந்தடைகிறார்கள். இந்திய வீரர்கள் அனைவரும் இங்கு 5-தேதி ஒன்றிணைவார்கள் என்று டெல்லி கிரிக்கெட் சங்க இணைச்செயலாளர் ராஜன் மன்சந்தா தெரிவித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரண்டு மாதங்கள் இந்திய வீரர்கள் தொடர்ந்து விளையாடிய நிலையில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி லோகேஷ் ராகுல் தலைமையில் நடக்கயிருக்கிறது . கொரோனா தாக்கம் குறைந்து விட்டதால் இந்த தொடரில் ரசிகர்கள் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள். வீரர்களுக்கான கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் உருவாக்கப்படாது. ஆனாலும் அவ்வப்போது கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close