அரசியல்சென்னைதமிழ் நாடு

முதன் முறை பதவியேற்கிறார் மு க ஸ்டாலின். 50 ஆண்டு அரசியல் பயணத்தில் முதல் முறையாக.

இன்று ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின்அவர்கள் முதன் முறை பதவியேற்கிறார்.அவரது தலைமையில் அமைச்சரவையும் பதவியேற்கிறது.

பதவியேற்பு நிகழ்ச்சி மிக எளிமையாகவும், கொரோனா இருக்கும் நிலை கருத்தில் கொண்டு முக்கிய நபர்கள் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.திமுகவின் கூட்டணி தலைவர்கல் வைகோ,ஜாஹிருல்லா,முத்தரசன்,கே.ஸ்.அழகிரி,ஈஸ்வரன்,வேல்முருகன்,பாலகிருஷ்ணன் வருகை புரிந்துள்ளனர்.
மற்ற கட்சி தலைவர்கள் மநீம தலைவர் கமலஹாசன்,சமக தலைவர் சரத்குமார்,கவிஞர் வைரமுத்து,காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்,பாமக தலைவர் ஜிகே.மணி மற்றும் தலைமை நீதிபதிகள்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராஜீவ் ரஞ்சன் தலைமை செயலாளர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார்.மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் அவர்களை பூங்கொத்தோடு வரவேற்று அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

சுமார் 9.10 மணிக்கு ஆளுநர் மு.க.ஸ்டாலின் க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என தொடங்கி உறுதிமொழியை ஏற்றார்.அதன் பிறகு அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும்
ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்தார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close