


நெட் கிடைக்கவில்லை அதன் காரணமாக குடில் ஒன்றை அமைத்து படிக்கும் மாணவி
ஆன்லைன் வகுப்புக்கு நெட்வொர்க் வேண்டுமென்பதால் மலையில் குடில் அமைத்து படிக்கும் கல்லூரி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கடந்த சில மாதங்களாக ஊர்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.
மஹாராஷ்டிராவை சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்வப்னாலி கோபிநாத் தனது கிராமத்தில், நெட்வொர்க் கிடைக்காத காரணத்தால், மலையில் நெட்வொர் கிடைக்கும் பகுதியை தேர்வு செய்து, தற்காலிக குடில் ஒன்று அமைத்து, தனது ஆன்லைன் வகுப்பில் படிப்பை தொடர்ந்து வருகிறது.
இந்த மாணவி குறித்த புகைப்படத்தை, வனத்துறை அதிகாரி தேவ் பிரகாஷ் மீனா தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.