சினிமா

கதாநாயகனாக அறிமுகமாகும் அடுத்த நகைச்சுவை நடிகர்

நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவர் நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து இயக்கும் படத்தை RS இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து சிரித்து ரசிக்கும்படியான நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

குற்றம், த்ரில்லர், ஆக்சன் என்ற பாதையில் பயணித்த வெற்றி மாறன் சூரியை வைத்து நகைச்சுவை திரைப்படம் எடுக்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close