ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் 24-06-2022

Today Raasi Palan 24-06-2022

மேஷம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும். ஆரோக்கியம் சிராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது

ரிஷபம்
நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். வெளிநாட்டு தொடர்பு நன்மை தரும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்
நண்பர்களின் சந்திப்பால் ஆனந்தம் பெருகும் நாள். இல்லத்தில் சுபகாரிய பேச்சு முடிவாகும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.

கடகம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பொருளாதார பற்றாக்குறை அகலும். புதுமனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்
மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்கும் திட்டம் நிறைவேறும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

கன்னி
யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்குகொடுக்கும் பொழுது ஒருகணம் சிந்திப்பது நல்லது. குடும்பத்தில் வீணாண குழப்பங்கள் தோன்றி மறையும்.

துலாம்
தனவரவில் இருந்த தடைகள் விலகும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை நாடி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சகம்
புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து செயல்படுவர். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.

தனுசு
நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாறுதல் கிடைக்கும். உயர்அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

மகரம்
பணவரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

கும்பம்
புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்பால் குடும்ப பிரச்சினை தீரும்.

மீனம்
குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close