ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் 05-06-2022

Today Raasi Palan 5-6-2022

மேஷம்
முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். செலவுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் வெற்றி உண்டு. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.

ரிஷபம்
இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. தொழில் மாற்றங்கள் செய்ய முன்வருவீர்கள்.

மிதுனம்
இன்று தனவரவு வந்து சேரும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்
இன்று பணவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.

சிம்மம்
திறமை பளிச்சிடும் நாள். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் வீடு தேடி வரலாம். பிள்ளைகளின் மூலம் உதிரி வருமானங்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் வெற்றி தரும்.

கன்னி
இன்று குதூகலம் காணும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். நீண்ட நாளைய பிரச்சனையொன்று பஞ்சாயத்துக்கள் மூலம் முடிவு பெறும்.

துலாம்
திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

விருச்சகம்
இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் இனிதே வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

தனுசு
இன்றைய நாள் அமைதியைக் கடைப்பிடித்து ஆனந்தம் காண வேண்டியது. நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் இன்று அவதிகளுக்கு உள்ளாவீர்கள். சம்பளப் பிடித்தத்தை நினைத்து கவலைப்படுவீர்கள்.

மகரம்
இன்று போன் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.

கும்பம்
இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வியாபாரம் சம்மந்தமாக ஆலோசனை கேட்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கொடுத்த பணம் வசூலாகும்.

மீனம்
இன்றைய நாள் வருமானம் உயரும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்புக் கிட்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close