
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக இளம் நாயகி மாளவிகா மேனன் நடித்துள்ளார். மேலும் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தில் நடித்திருப்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் “ஒரு குட்டி கதை” சிங்கிள் வெளிவந்த சென்சேஷனல் மற்றும் வைரல் ஹிட் அடித்தது. அனிருத் இசையமைக்க தளபதி விஜய் அவர்களே பாட, இப்பாடல் முழுவதும் பாசிட்டிவ் பீல் பாட்டரியே உள்ளது.
தற்போது மாஸ்டர் படத்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடல் இணையதளத்தில் புரட்டிப் போட்டு வருகிறது. இந்த படத்தின் ஆடியோ லான்ச் வரும் மார்ச் 15-ம் தேதி லீலா பேலஸ் வைத்து நடக்க உள்ளது.