சினிமா

வலிமை திரை விமர்சனம்

valimai movie review tamil

கிரைம் திரில்லர், அம்மா மகன், அண்ணன் தம்பி பாசம், போதைப்பொருள், பைக் கொள்ளையர்களை மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வினோத்.

மதுரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜித், அம்மா, அண்ணன், தம்பி, அக்கா என்று வாழ்ந்து வருகிறார்.

பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு போதைப்பொருட்கள் எடுத்து செல்லும் போது, பைக்கில் வரும் மர்ம இளைஞர்கள் அதை கடத்துகிறார்கள்.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜித் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகிறார்.
ஒருநாள் மேன்சனில் தற்கொலை செய்த நபரை பற்றி விசாரிக்க அப்போது அந்த தற்கொலையின் பின்னணியில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் கடத்தலில் பைக் கேங் தலைவன் கார்த்திகேயா ஈடுபடுவதை கண்டுபிடிக்கிறார்.
ஆக்சன், காமெடி, சென்டிமென்ட், நடனம் என அனைத்திலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக பைக் ஆக்சன் காட்சியில் மிரள வைத்திருக்கிறார். அண்ணன், தம்பி பாசத்தில் நெகிழ வைத்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரது உடல் அமைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button
Close